அஜித்குமார் நடித்த வேதாளம் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதன்பிறகு விவேகம் என்ற படத்தில் அவர் நடித்தார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்தார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்தார்.
கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து முடிந்தது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் போல் அஜித்குமார் கட்டுமஸ்தான உடற்கட்டில் தோன்றும் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தை தணிக்கை குழுவினர் நேற்று பார்த்து எந்த காட்சியையும் நீக்காமல் ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற 10-ந் தேதி விவேகம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தை வருகிற 24-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment